களிமண் சிற்ப ஒராண்டு பயிற்சி நெறி

Barack Obama

திருமறைக் கலாமன்ற ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் களிமண் சிற்ப ஒர் ஆண்டு பயிற்சி நெறி எதிர்வரும் 25.06.2016 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து மாதத்தின் இறுதி சனி, ஞாயிறு தினங்களில் முழுநாள்பயிற்சி நெறியாக நடைபெறவுள்ளது.

இதனை நடத்துவதற்காக கொழும்பிலிருந்து கட்புல, ஆற்றுகைக் கலைகள் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு கற்கைநெறியின் பீடாதிபதி பேராசிரியர் சரத் சந்திர ஜீவா தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளார்கள். இப்பயிற்சியில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதால் இதில் இணைந்து கொள்ள ஆர்வமுடைய மாணவர்கள் எதிர்வரும் 23.06.2016 வியாழக்கிழமைக்கு முன்பாக தமது பதிவுகளை திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

Related posts

*

*

Top