குடும்ப வேளாண்மையின் முக்கியத்துவம்

– பேராசிரியா் கு.மிகுந்தன்

‘குடும்ப வேளாண்மை’ என்பதனை ஐக்கிய நாடுகள் தாபனம் 2014ம் ஆண்டுக்கான கொள்கையாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்துவிட்ட நாடுகளனைத்திற்கும் பொதுவான விடயமாக கொண்டாடுவதற்காக ஆண்டினை. இது ஒரு முன்னோடியான திட்டமென கருதினாலும் இச்செய்தியை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துதல் மிக முக்கியமானதாகும். குடும்ப வேளாண்மையின் பயன்பாடுகளை அனைவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும். குடும்ப வேளாண்மையின் மூலமாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களது தற்போதய வாழ்க்;;கை நிலைமையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய தேவைகளை செய்வதற்கும் முடியும். இதனை கருப்பொருளாக்கி குடும்ப வேளாண்மையின் மகத்துவத்தை உலகறியச் செய்வதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பசி பட்டினியின் கோரப்பிடியிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றலாம் என எண்ணுகின்றனர். குடும்ப வேளாண்மையின் மூலம் மக்களுக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடிவதுடன் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன் எம்மிடமுள்ள இயற்கை வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் அத்துடன் நிலைபேறான விவசாயத்தை பேணவும் முடியும்.

Prof.G.Mikunthanகுடும்ப வேளாண்மையின் குறிக்கோளாக விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பன உள்வாங்கப்பட்டு அவற்றின் மூலம் பரந்துபட்ட அளவில் விவசாய அபிவிருத்திக்கான திட்டங்களை சூழலுக்கியைவானதாக மாவட்ட மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் வடிவமைப்பதற்கு இது உதவும். குடும்ப வேளாண்மை என்பது குடும்பம் சார்ந்த உணவுத்தேவையை பூர்த்திசெய்வதாகும். இதில் குடும்ப உறுப்பினர்கள் பங்குகொண்டு பயிர்களை வளர்த்தல், கால்நடைகளை வளர்த்தல், மீன்வளர்த்தல், கால்நடைகளுக்கான தீவனப்பயிர்களை வளர்த்தல் என்பனவாகும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் உலக கோடீஸ்வரனும் தொழில்நுட்பத்தின் வல்லுனருமான பில்கேட்ஸ் உலகளாவிய ரிதியில் பசிபட்டினியை ஒழிப்பதற்காக கோழிவளர்ப்பினை முதன்மைப் படுத்தியிருப்பது தான்.

குடும்ப வேளாண்மையின் மூலமாக உலக உணவு பாதுகாப்பினை ஏற்படுத்த முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரம்பரிய உணவுகளை உண்ணுவதனை ஊக்கப்படுத்துவதும் சமச்சீரான உணவை உண்பதனை சிபார்சு செய்வதற்கும் முடியும். அத்தோடு வேளாண் சூழல் தொகுதியை பாதுகாப்பதும் உள்ளூர் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் முடியும். குடும்ப வேளாண்மையின் மூலமாக உள்ளூர் பொருளாதார நிலை விருத்தியுறும். கிராமிய மட்டத்தில் உள்ள அனைத்து வளங்களையும் இனங்கண்டு அவற்றை வினைத்திறனான வகையில் பயன்படுத்தவும் அதேநேரத்தில் எங்களுடைய வளங்களை பாதுகாக்கவும் வழிபிறக்கும்.

குடும்ப வேளாண்மை என்றவுடன் பலர் இது விவசாயிகளுக்குரியதென தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடாது. அனைவருக்குமான வேளாண்மையென கருத்தில் எடுக்க வேண்டும். ஏனெனில் உணவு உண்ணுவதற்காக செய்கின்ற வேளாண்மையாக இருப்பதனால் உணவு உண்ண நினைக்கும் எவருக்கும் இவ்வேளாண்மை கைகொடுக்கும். ‘உழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்பது சொல்லி வைத்த கருத்தும் அதுதானே. நஞ்சற்ற சுகாதாரமான உணவு உற்பத்தி செய்து உண்பதற்கான வாய்ப்பாக இதனை கருதலாம். உலகளாவிய ரீதியில் உணவுற்பத்திக்கு தேவையான அனைத்து வழிகளையும் கருத்தில் கொண்டிருக்கும் இந்நேரத்தில் குடும்ப வேளாண்மை முன்னிலைப்படுத்தப் படுகின்றது.

ஆபிரிக்கா தேசத்தில் மக்கள் இன்னும் பசி பட்டினியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. மக்களுக்கு உண்ண உணவில்லை. இதற்கு மேல் சத்துணவுக் குறைபாடும் மக்களை வாட்டியெடுக்கின்றது. இதன்காரணமாக குடும்ப வேளாண்மையினை ஊக்குவித்து மக்களுக்;கு தேவையான அடிப்படை உணவினை தயாரித்து கொடுக்கின்ற உள்ளங்கள் இன்னும் இருக்கின்;றன. வறுமையில் சிக்கியிருக்கும் மக்களுக்கான அடிப்படைவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க குடும்ப வேளாண்மை முயற்சிக்கின்றது.

இங்கே உலக உணவு தாபனம் இவ்வாண்டுக்கான கருவாக அவரைகளுக்கான ஆண்டாக பதிவு செய்து அவரைப்பயிர்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக பல திட்டங்களைத் தீட்டியிருக்கின்றது. இதில் உணவுற்பத்தியை அதிகரிக்கவும் அதன்மூலம் தேவையான ஊட்டச்சத்தினை அனைவருக்கும் கிடைக்க வழிசெய்தலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

எமது பிரதேசத்திலும் உணவுப்பற்றாக்குறை நிலவுவதை அவதானிக்கலாம். நெல்லில் நாம் தன்னிறைவு கண்டுவிட்டோம் என மார்தட்டி நின்றாலும் உணவுக்கான கிடைதன்மை சரியான வழங்கல் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மக்கள் உணவுக்காக அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கின்றது. தற்போது எழுந்துள்ள காலநிலை மாற்றம் இவையெல்லாவற்றுக்கும் கட்டியங்கூறுவது போல இன்னும் பயிர் விளைச்சலை பாதித்திருக்கின்றது. வழமையாக பெய்யும் மழை காலம் மாறி பெய்திருக்கின்றது. இயற்கையின் திருவிளையாடலாக நாம் நினைத்திருந்தாலும் எவ்வகையிலோ நாம் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தவர்களாகவும் இருக்கின்றோம். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உலக அளவில் குடும்ப வேளாண்மையை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் வினைத்திறன் மிக்கதாக அனைவருக்கும் உணவு என்னும் நிலையை ஏற்படுத்தும் என கொள்வோமாக.

Related posts

*

*

Top