பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள்

இலங்கை எழுத்ததாளர்களை அங்கீகரித்து, ஆதரவளிக்கும் வகையில் 2017 ஐனவரியில்   “பெயார்வே  காலி” இலக்கிய விழாவில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.  சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூல்களின் ஆசிரியர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, வெற்றி பெற்ற நூலுக்கு 500,000 ரூபாயும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றைய நூல்களுக்கு   100,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கான தகைமையாக  நூல்கள் 2015 ஐீன் 01ஆம் திகதிக்கும் 2016 மே 31ஆம் திகதிக்கும் இடையில்  இலங்கையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் 2016 ஐீலை 05ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் எமது செயலகத்தை வந்தடைய வேண்டுமெனவும் விண்ணப்பப் படிவங்களையும், தகமை விபரங்களையும் www.fnla.lk இணைய தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு :
செயலகம்,
பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள்
‘பெயார்வேஸ்’
இல.100, புத்தமுவ வீதி,
ராஐகிரிய.
தொலைபேசி : 0117 586586 / 077 446 2285
மின்னஞ்சல் : info@fnla.lk

*

*

Top